திருச்சி மாவட்டம் லால்குடி காட்டுரில் இருந்து மேட்டுபட்டி தின்னியம் அன்பில் வரையுள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் இந்த சாலை குறுகலாக உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விபத்து அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.