ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட நெடுவிளையில் இருந்து ஆனக்குழி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பட்டுப்போன மரம் நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் மரம் முறிந்து விழும் நிலையில் நிற்பதால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரத்தில் பட்டுபோன நிலையில் நிற்கும் மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.