நத்தத்தை அடுத்த செங்குறிச்சியில் இருந்து சென்மேட்டுக்களம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவிக்கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.