(படம்)
வத்தலக்குண்டு பேரூராட்சி 18-வது வார்டு கடைவீதியில் தெருவை ஆக்கிரமித்து குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த தெருவை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தெருவில் குவிந்து கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்ற வேண்டும்.