ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு அருகில் பல மாதத்திற்கு முன்பு வேகத்தடை அகற்றப்பட்டது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டை கடந்து செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. சுற்றுபுற பகுதிகளில் அரசு மருத்துவமனை, போலீஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்றம் ஆகிய அரசு அலுவலகங்கள் உள்ளதால் அப்பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?
-குமார், ஓமலூர்.