தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் சாலை கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.