மழைநீர் தேங்கும் சாலை

Update: 2025-07-20 16:23 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் ராக்லேண்ட் தெரு சந்திப்பு பகுதியில் மழைநீர் தேங்குகிறது. அத்துடன் அங்கு பள்ளங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகி வருகின்றன. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு காரணம், அங்கு மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறாததுதான். எனவே அந்த சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்