தியாகதுருகம் அருகே பெரியமாம்பட்டு பகுதியில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி எதிரே சாலையோரத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.