விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-07-20 11:19 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் மேம்பால பணிகள் நடைபெறுவதால் திருக்காட்டுப்பள்ளி அன்பிலில் இருந்து வரும் வாகனங்கள் கொப்பாவளி குறுக்கு சாலை வந்து காட்டூர், பூவாளூர் வழியாக லால்குடியை வந்தடைகிறது. இந்நிலையில் பின்னவாசல் முதல் கொப்பாவளி வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் வந்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பின்னவாசல் முதல் கொப்பாவளி வரையுள்ள சாலையை அகலப்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்