திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் கோப்பு கிராமத்தில் கல்லுகாடு பகுதியில் இருந்து எட்டரை ஒத்தகடை பகுதிக்கு செல்லும் சாலையானது பல ஆண்டுகளாக மண்சாலையாகவே உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.