சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-20 09:27 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுகட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக சாலை தோண்டப்பட்டது. ஆனால் அந்த பகுதிகளில் பணிகள் முடிந்தும் தற்போது வரை சாலை சரிசெய்யப்படாமல் சேதமடைந்து நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிய சாலை அமைத்துதர முன்வருவார்களா?


மேலும் செய்திகள்