குமராட்சி அருகே சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி பரமேஸ்வரநல்லூர் கிராமத்தில் உள்ள சாலையானது பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து புதிதாக சாலை அமைத்துத்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.