மதுரை ரெயில் நிலையத்தை அடுத்து சிம்மக்கல் செல்லும் வழியில் மீனாட்சி பஜார் சாலை அமைந்துள்ளது. இந்த பஜார் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகின்றது. இதனால் அவ்வழியே அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட வழித்தடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?