கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள மலையம்பாளையம் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த தார்ச்சாலையில் கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குண்டும், குழியுமான சாலையை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கோள்கிறேன்.