பட்டுக்கோட்டை பகுதியில் பாளமுத்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலையின் இருபுறம் மரக்கிளைகள்,செடி,கொடிகள் வளர்ந்து உள்ளன. இதனால் சாலை வளைவு பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. பள்ளி, கல்லூரி வேன்கள் மிகுந்த சிரமத்துடன் சாலை வழியாக சென்று வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.