மீன்சுருட்டி முதல் இளைய பெருமாள் நல்லூர் வரை உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளது. இதனால் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு கூட விரைவாக செல்ல முடியவில்லை. 100 முதல் 200 மீட்டருக்குள் ௨ அல்லது 3 வேகத்தடைகள் அமைந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.