கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரில் புதன்கிழமைதோறும் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அங்கு போக்குவரத்து நெரிசல் தீர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.