கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூர் என்.எஸ்.ஆர். சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த வழிேய கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே அந்த சாலையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதை தடுக்க போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்ைகளில் ஈடுபட வேண்டும்.