ஊட்டி அருகே அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் இணையும் பகுதியில் இருந்து காட்டுக்குப்பை நீர்மின் திட்ட அலுவலகத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.