வெள்ளக்கரை ஊராட்சியில் வி.காட்டுப்பாளையம் தொடக்கப்பள்ளி எதிரே புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. அங்கு வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்களில் மாணவர்கள் சிக்கி காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.