ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது வயலூர் கிராமம். இங்குள்ள 8-வது வார்டு வி.வி.நகரில் ஒரு இடத்தில் மட்டும் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை இல்லை. இதுபற்றி பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், பழனி தாசில்தாரிடமும் மனு அளித்தும் சாலை அமைக்காமல் உள்ளனர். எனவே இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.