நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி இல்லாமல் திறந்தநிலையில் இருக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்க்கு சிமெண்டு ‘சிலாப்’புகள் மூலம் மூடி அமைக்க வேண்டும்.