கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம், மஞ்சா நாயக்கன்பட்டி ஊராட்சி செல்லாண்டிபுரத்திலிருந்து வில்வமரத்துப்பட்டி, நத்தப்பட்டி, சோனம்பட்டி, நல்லமுத்துப்பாளையம் வழியாக கரட்டுப்பட்டிக்கு தார் சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினந்தோறும், அரசு பஸ்கள், தனியார் கல்லூரி, பள்ளி வாகனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என சென்று வருகின்றனர். இந்த சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதாலும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மாறி, ஜல்லி கற்கள் பெயர்ந்து போக்குவரத்து வாகனங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த சாலையை சீரமைத்து தரமான தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.