தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-07-06 11:29 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் முருங்கப்பேட்டை பங்களா பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதினால் விபத்து அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முருங்கைப்பேட்டை பங்களா பஸ் நிறுத்தத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வேகத்தடை அமைத்து அதன் அருகிய வேகத்தடைக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்