சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2025-07-06 06:41 GMT

நுள்ளிவிளை கார்மல் மாதா குருசடியில் இருந்து வடக்கு நுள்ளிவிளைக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தது. அதன்பிறகு சாலையை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். முதியோர் நடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை விரைந்து சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்