சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் இருந்து ராஜாஜி ரோடு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சில இடங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராம், சேலம்.