சேலம் சோனா கல்லூரி அருகே ஏ.வி.ஆர். ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது வேகத்தடை அகற்றப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல் சேலம் குரங்குச்சாவடியில் இருந்து சங்கர் தியேட்டர் செல்லும் சாலையிலும் வேகத்தடை அகற்றப்பட்டு உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க அந்த பகுதிகளில் அவசியம் வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிராஜ், தாரமங்கலம்.