குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2025-06-22 12:12 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து வீரபோகம் கிராமம் வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்போது இந்த சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை பழுது