கடலூர் அடுத்த எம்.புதூரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு பிரியும் சாலையில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட அளவை விட அதிகமான உயரத்தில் உள்ளதால் அவ்வழியாக வரும் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
