பர்கூர் பேரூராட்சிக்குட்பட்ட ஜெகதேவி ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிமெண்டு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக நடந்தும், மோட்டார் சைக்கிளில் செல்லும் மக்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சிமெண்டு சாலை சீரமைக்கப்படுமா? என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
-ஜெயவீரன், பர்கூர்.