நடுரோட்டில் நிறுத்தப்படும் பஸ்கள்

Update: 2025-06-01 17:00 GMT

கம்பத்தில் இருந்து உத்தமபாளையம் வழியாக தேவாரம், போடிக்கு செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்வதற்காக உத்தமபாளையம் கருவூல அலுவலகம் எதிரே நிழற்குடையுடன் பஸ் நிறுத்தம் உள்ளது. ஆனால் சில அரசு, தனியார் பஸ்கள் அந்த பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் பைபாஸ் சாலை வளைவு அருகே நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு ஏற்றிச்செல்கின்றன. இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தத்தில் அரசு, தனியார் பஸ்களை நிறுத்திச்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்