விருதுநகர் ெரயில்வே பீடர் ரோடு பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக சாலை தோண்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வரை சாலையை முறையாக சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும்.
