தியாகதுருகம்- திருக்கோவிலூர் சாலையில் இருந்து வடதொரசலூர் ஊராட்சி கோவிந்தசாமிபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையானது சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.