பனப்பாக்கம் -புதுப்பேட்டை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.