குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2025-05-25 17:34 GMT

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியம், ரெட்டியாபட்டி கிராமத்தில் உள்ள தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால் மழை பெய்யும் போது மழைநீர் அவற்றில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை பழுது