அதிராம்பட்டினம் சிவன் கோவில் அருகே புதிய மீன் மார்க்கெட் உள்ளது. இதன் அருகே உள்ள சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.