வேகத்தடை வேண்டும்

Update: 2025-05-25 13:25 GMT

பட்டுக்கோட்டை டவுன் பிள்ளையார் கோவில் தெரு சாலையில் இருந்து தலைமை தபால் நிலையம் திரும்பும் பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. சாலையில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர். வேகத்தடை இல்லாததால் அந்தப் பகுதியில் அடிக்கடி சிறு,சிறு விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட சாலையில் ஆய்வு செய்து தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்