தஞ்சையை அடுத்த விளார் பகுதி காயிதே மில்லத் நகர் 2, 3, 4 ஆகிய தெருக்களில் சாலை பராமரிப்பின்றி இருக்கிறது. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால் சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
