கோவில்பட்டி கருணாநிதி நகரில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலைைய சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.