கள்ளக்குறிச்சி நீலமங்கலம் காமதேனு நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறுவதால் கடும் அவதியடைகின்றனர். அதுபோல் தெருவிளக்குகளும் சரிவர எரிவதில்லை. எனவே அப்பகுதியில் புதிதாக சாலை வசதி ஏற்படுத்தி தருவதோடு, தெருமின்விளக்குகளையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.