விருதுநகர் மாவட்டம் பாவாலி கிராமத்தில் உள்ள சாலை சேதமடைந்த குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மழை காலங்களில் சாலை முழுவதுமாக தண்ணீர் தேங்குவதுடன் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?