கோவை நவ இந்தியா சிக்னல் பகுதியை தினமும் காலை, மாலை நேரங்களில் ஏராளமான மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடந்து செல்கின்றனர். ஆனால் அங்கு போக்குவரத்து போலீசார் யாரும் பணியில் இருப்பது இல்லை. இதனால் அங்கு சிக்னலை கடந்து செல்வோருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசாரை அங்கு பணியமர்த்த உயர் அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.