திருவாரூரை அடுத்த புதூர் பகுதி நமச்சிவாயபுரம் சிவன்கோவில் தெருவில் தார் சாலை வசதி இல்லை. குறிப்பாக சிவன் கோவிலிருந்து காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. பொதுமக்கள், கோவிலுக்கு வருபவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மண்பாதை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும், வாகனங்களும் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.