திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஜெய்நகர், எழில் நகர் செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.