குண்டும் குழியுமான சாலை

Update: 2025-05-11 18:29 GMT

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் இருந்து மணியக்காரம்பாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை பணி முடிந்த பின்னும் சரியாக மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இவ்வழியாகத்தான் பல்வேறு வாகன ஓட்டிகள் சென்று வருவதால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒருசில நேரங்களில் அதில் சறுக்கி விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்