திருச்சி அருகே உள்ள அருணா அவன்யூவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆவதினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.