புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் கடைவீதி பகுதிகளில் ஏராளமான மாடுகள் பகல் மற்றும் இரவு நேரத்தில் சுற்றித்திரிகின்றன. சில மாடுகள் சாலையின் குறுக்கே படுத்துக்கொள்வதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.