குண்டும்,குழியுமான சாலை

Update: 2025-05-11 11:53 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் பெருகவாழ்ந்தான் ஊராட்சிக்கு உட்பட்ட பாம்புகாணிக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். குண்டும்,குழியுமான சாலையினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி சிறு,சிறு விபத்துகள் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்