சேதமடைந்த சாலை

Update: 2025-05-11 07:02 GMT

குழித்துறையில் இருந்து அருமனை செல்லும் சாலையில் முழுக்கோடு வண்டாளம் தோட்டம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையின் நடுவே ஜல்லிகள் பெயர்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலர் விபத்திலும் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டேவிட், முழுக்கோடு.

மேலும் செய்திகள்