ரிஷிவந்தியம் அடுத்த மரூர் ஊராட்சியில் திருக்கோவிலூர்- சங்கராபுரம் செல்லும் சாலையில் இருந்து ஏந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து பல மாதங்கள் ஆன பிறகும் அந்த பள்ளத்தை முறையாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.